காவிரி நதி நீர் பிரச்சினையில் இரட்டை வேடம்
இவர் கேட்டார்... அவர் கொடுத்தார்.. பிரச்சினை சுமூகமாக தீர்ந்தது..
மேற்க்கண்ட தலைப்புடன் கலைஞர் நியுஸ் தொலைகாட்சியில் மகா பில்ட் அப்புடன் ஒரு செய்தியை வாசித்தார்கள். அதாவது தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை தண்ணீர் திறந்துவிடும்படி கேட்டாராம்.. அவரும் சரி என்றாராம்.. உடனே தண்ணீரும் வந்தது....!!!!
சரி ஏதோ நடக்கிறது.. நல்லது நடந்தால் போதும் என நினைத்து அடுத்த நாள் சன் செய்திகளை பார்த்தால் தலை சுற்றியது??!!!!
காவிரி டெல்டா பகுதிகளில் ஸ்டிரைக், மறியல், கலவரம், போக்குவரத்து பாதிப்பு.. தமிழக லாரிகள் கர்நாடக எல்லையோரம் நிறுத்தம்..
காரணம்.. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசை கண்டித்து....
கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் மீடியா முன்பு இல்லா.. இல்லவே இல்லா... என்று செய்து சத்தியம் கொண்டிருந்தார்.
சரி நடந்தது தான் என்ன?
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை. அதை தொடர்ந்து கபினி அணையிலிருந்து கட்டாயமாக நீரை வெளியேற்ற வேண்டிய நிலை. எனவே பதினேழாயிரம் கன அடி நீரையும், கே. ஆர். எஸ். அணையிலிருந்து மூவாயிரம் கன அடி நீரையும் (குடிநீருக்காக) திறந்து விட்டிருக்கிறார்கள்.
அதைத்தான் மேற்க்கண்ட பில்ட் அப்களுடன் கலைஞர் டி. வி யில் சுய தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
உண்மையில் ரொம்ப பாவம் தமிழக காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள்.
No comments:
Post a Comment