Thursday, September 30, 2010

ஒரு நீதிமன்ற தீர்ப்பும், அரசுத் துறையின் முன்னெச்சரிக்கையும்

ஒரு வழியாக ராம ஜென்ம பூமி விவகாரத்தில் தீர்ப்பு வந்து விட்டது.  தீர்ப்பை பற்றி நாம் சொல்வதற்கு  ஒன்றுமில்லை.  ஆனால் இந்த தீர்ப்பு பற்றிய பரபரப்பை கடந்த 15 நாட்களாகவே மக்களை ஜுரம் போல் தொற்றிக்கொள்ள வைத்துவிட்டன - மீடியாக்களும், மத்திய மாநில அரசுகளும்.

நாட்டில் 70 % மக்கள் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற ரீதியில் இருப்பவர்கள் தான்.  இவர்களையே தங்கள் பிழைப்பை விட்டுவிட்டு அது என்ன என்று கூர்ந்து  கவனித்து அதைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு விட்டு விட்டது.  அது மட்டுமா..  இன்று மட்டும் சுமார் 1 .5 லட்சம் லாரிகள் தங்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டன.  தீர்ப்பு வரும் வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் முடங்கிக் கிடந்தவர்கள் எத்தனை பேர்?

தீர்ப்பு வந்தவுடன் எல்லோருக்கும் ஒரு நிம்மதி வந்துவிட்டது.  நிச்சயமாக கலவரம், அசம்பாவித சம்பவங்கள் நடக்காது என்ற எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது. 70 % மக்கள் வழக்கம் போல் தங்கள் வேலைகளை பார்ப்பார்கள் என்று நம்பலாம்.  ஆனால் மீடியாக்களுக்குத் தான் பாவம் 'சப்' என்று போய் விட்டது. 

முன் ஏற்பாடுகள் விஷயத்தில் நாம் மத்திய மாநில அரசுகளை பாராட்டியே தீர வேண்டும். கடந்த இரு வாரங்களில் bulk SMS களுக்கு தடை ஏற்படுத்தியும்(Force), வதந்திகளை நம்ப வேண்டாம்  என்று அறிவுறுத்தியும் (advice), போலீஸ்  
உபகரணங்களைக் கொண்டு  பயம் ஏற்படுத்தியும் (threatening) நன்றாக
நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தன.

இந்த தீர்ப்பால் உளவுத் துறையும் காவல் துறையும் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் பதட்டமான பகுதிகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது -  இதை தூண்டும் குறும்புக்கார பயல்களும், மத வெறி பிடித்த பாசக்கார பயல்களும் இருக்கும் வரை.

தம்மாத்துண்டு இடமான 2 .5 acres க்கு சுமார் 110  கோடி மக்கள் தொகை ஒரு கொண்ட தேசம்  60 ஆண்டுகளாக ஒரு தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை.

அது சரி.. தீர்ப்பு வரும் நேரம் மின்சாரத்தை ஏன் துண்டித்தார்கள்? டி.வி.யை மக்கள் பார்க்க கூடாது என்று எண்ணத்திலா?  

தீர்ப்பு..?  அதை செய்தி சேனல்களிலும் நாளை தினசரிகளிலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Wednesday, September 22, 2010

தூக்கு தண்டனை

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை நிறை வேற்றும் நாளை அறிவித்துள்ளது நீதிமன்றம்.  சிலருக்கு சந்தோஷமும் சிலருக்கு துக்கமும் இருக்கும் .  அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் நம்பி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் அல்லக்கைகள் இனியாவது தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைத்து அடக்கி வாசிப்பது நல்லது.

Monday, August 30, 2010

உண்மையில் தண்டனை யாருக்கு???

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவருக்கு உச்ச நீதி மன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

காலம் கடந்த தீர்ப்பு என்று கொலை செய்யப்பட ஒரு மாணவியின் தந்தை வேதனையுடன் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. 

ஆனால் அவர்கள் தூக்கில் போடப்படுவார்களா அல்லது ஏற்கனவே காத்திருக்கும் தூக்கு தண்டனை கைதிகள் பட்டியலில் அவர்களும் சேர்ந்து காத்திருப்பார்களா என்பது தான் இப்போதைய கேள்வி.

நம் அரசாங்கத்தின் இப்போதைய செயல் படாத நிலையை வைத்து பார்க்கும் போது அவர்கள் இன்னும் சில வருடங்கள் (??) உயிருடன் இருக்கப்போவது உறுதி. அவர்களுக்கு என்ன.. உயிருடன் இருந்தாலும் அல்லது போய் சேர்ந்தாலும் இரண்டும் ஒன்று தான்.  ஆனால் அவர்களின் குடும்பத்தவர்கள் அனு தினமும் அல்லவா செத்து கொண்டிருப்பார்கள்.  அதற்கு அந்த அரசியல் கட்சிக்காரர்களால் என்ன தர முடியும் - பணத்தைத் தவிர...

வாங்க பாஸ்.. நம்ம இதெல்லாம் மறந்து போகிறது சகஜம் தானே...!!!!

ஒரு வழியாக இன்று அந்த "சிறப்பு தூதர்" வெளியுறவு செயலர் நிருபமா ராவ் என்பதும் அவர் இன்றே இலங்கை செல்வதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

அவர் "இங்கு நாம் நலம் - அங்கு அவர்கள் அனைவரும் நலமே" என்று தி.மு.க. தலைவர் சொல்லிக்கொடுத்ததை திரும்ப வரும் போது சொல்லப்போகிறார்.

500 கோடி ரூபாயுடன் மேலும் ஒரு ரூபாய் சேர்த்து இலங்கை அரசு மிகவும் பெருந்தன்மையுடன் தமிழ் மக்களின் மீள் குடியிருப்பு பணிகள் அனைத்தையும்  திறம்பட நடத்துவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழர்கள் அனைவரும் தத்தமது புதிய குடியுருப்புகளுக்கு சென்று விடுவார்கள் என்றும் அவர் சொல்லாவிட்டாலும் கூட நாம் நம்புவோமாக..  ஏனென்றால் நாம் தான் எல்லாவற்றையுமே சீக்கிரம் மறந்துவிடுவோமே...!!!

Friday, August 27, 2010

சுட்டது

என் சினிமா நண்பன் சொன்ன கதை இது. விஜய்காந்த்துக்கு திருமணம் ஆகாத நேரம். அவரது ஆபீசில் எப்போதும் நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பார். ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்கு எல்லோரும் தயார் ஆனார்கள். விஜய்காந்த், இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். நல்ல தலைவாழை இலை போட்டு சாப்பாடு. பரிமாறுகிற இளம்வயது வாலிபன், வரிசையாக எல்லா இலைகளிலும் சிக்கன் துண்டை போட்டுக்கொண்டு வந்தான். ஆர். சுந்தர்ராஜனை கவனிக்காமல் சென்றுவிட்டான். சுந்தர்ராஜனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனைக் கூப்பிட்டார்.

"ஏய் இங்க வா"

"சார்..."

"உம் பேரு என்ன"

"முருகனுங்க"

"எந்தூரு"

"வாடிபட்டிங்க"

"என்னா படிச்சிருக்க"

"மூணாங் கிளாசுங்க"

உடனே அவனை முறைத்துப் பார்த்த ஆர். சுந்தர்ராஜன் கோபத்துடன் இப்படிச் சொன்னாராம்:

"இந்த ஆபீஸ்லயே அதிகமா படிச்சவன்ற திமிர்ல ஆடாத. போடா...போய் சிக்கன் கொண்டு வா"

Thursday, August 19, 2010

வாங்க பாஸ்.. நம்ம இதெல்லாம் மறந்து போகிறது சகஜம் தானே...!!!!

இலங்கையில் நிவாரணப்பணிகளை கண்காணிக்க(?) சிறப்புத் தூதர் ஒருவரை  அனுப்ப தி. மு. க அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய காங்கிரஸ் அரசு ஒருவழியாக முடிவெடுத்துள்ளது.

முதலாவதாக கவனிக்க வேண்டியது - தி. மு. க அரசின் நிர்ப்பந்தம். அது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான நிர்பந்தம் என்று நாம் நினைத்தால் அது அப்பாவித்தனம். சட்டப்பேரவை தேர்தல்களுக்கான அடித்தளம் என்பது அப்பாவிகளுக்குக்கூட தெரியும்.

போர் முடிந்து ..மன்னிக்கவும்.... படுகொலைகள் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலான பிறகு ஜூலை 17 ந்தேதி தமிழர்களின் மீள் குடியிருப்பைப் பற்றி கவலை வந்து ஒரு கடிதம்(!!!!) எழுதுகிறார் தமிழக முதல்வர்.  அந்த கடிதத்திற்கு ஜூலை 23 ந்தேதி பிரதமர் பொத்தாம் பொதுவாக (சர்வ வல்லமை படைத்த) ஒரு தூதர் ஒரு மாதத்தில் அனுப்பப்படுவார் என்று பதிலளிக்கிறார்.

பின்னர் சாவகாசமாக ஒரு மாதம் முடிந்த பின்னர் ஆக. 19  அன்று வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் கருணாநிதியின் இல்லத்தில் அவரை சந்தித்து விட்டு இன்னும் ஒரு மாதத்தில் அந்த சிறப்புத் தூதர் அனுப்பப் படுவார் என்கிறார்.

அடுத்த மாதமும் இதே பதிலை சொல்வார்கள் என்று நாம் நம்பினால் அது நமது அறியாமை.  வழக்கம் போல் நாம் அதை அடுத்த மாதத்திற்குள் மறந்து விட்டிருக்க வேண்டும்.

சரி.. இலங்கைக்கு அனுப்பப் போகும் தூதர் என்ன தேவ தூதரா? அவர் ஒருவர் இலங்கைக்குப்  போனால் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் சுபிக்ச முக்தி அடைந்துவிடுவார்களா???  அவருக்கு தமிழர்களின் உண்மையான நிலை / மன நிலை / எதிர்பார்ப்பு தெரியுமா?  யார் போகப்போகிறார் என்று அறிவிப்பதில் கூட என்ன குழப்பம்?? 

அவர் போன அன்றோ அல்லது மறுதினமோ எல்லோருக்கும் புது வீடு / புத்தாடைகள் / மூன்று வேளை நிரந்தர உணவு கிடைத்துவிடுமா?? அல்லது ராஜபக்ஷே "தமிழ் வாழ்க" என்று முழக்கமிட போகிறாரா??

மொத்தத்தில் நடக்கப்போவது எல்லோருக்கும் தெரிந்ததே.. முதலில் ஒரு விருந்து நடக்கும். அதில் அந்த தேவ தூதர் நன்கு கவனிக்கப்படுவார். முள் வேலி தமிழர்கள் அனைவரும் எந்த குறையுமில்லாமல் இந்திய உதவியுடன் நலமாக இருப்பதாக ராஜபக்ஷே அவரை நம்ப வைப்பார். அதை நிரூபிக்க சீன உதவியுடன் கட்டப்பட்டு வரும் பல திட்டங்களை அவருக்கு  ஹெலிகாப்டரில் சென்று காட்டிவருவார்.  மீண்டும் விருந்து முடிந்தவுடன் இருவரும் பொது அறிக்கை விடுவார்கள்.

அப்போதோ அல்லது அதற்கு முன்னரோ சி. தூதர் ஏதாவது விளக்கம் கேட்டாலோ அல்லது குடைய ஆரம்பித்தாலோ ராஜபக்ஷே அவரை பகிரங்கமாக மிரட்டுவார்.  சி. தூதரும் 'அது சும்மா ஜோக்" என்று மீடியாக்கள் முன்பு வழிவார்.

இது போன்ற சரித்திர புகழ் வாய்ந்த முடிவுகள் இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல..  மாவோயிஸ்டுகள், காஷ்மீர், விலைவாசி..  இப்படி எல்லாவற்றிலுமே "௦பூஜ்யம்" முடிவுகள் தான்.

அதனால் தான் நம் பாரத பிரதமர் சிறந்த நிர்வாகி என்று உலக நாடுகளிடம் பெயர் பெற்றிருக்கிறார்.  இந்த qualifications  இருந்தாலே போதும்..  யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகிவிடலாம் போலிருக்கிறதே!!!!

Tuesday, August 17, 2010

அந்த மாதிரி ஏழைகள் எங்கிருக்கிறார்கள்??????

எல் எஸ் எஸ் பேருந்துகளில் ஐம்பது காசுகள் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது யாருக்காவது தெரியுமா?  இப்போதெல்லாம் குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாயாம். 

ஆனால் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.

வீட்டு உபயோக எரிவாயு ஒரு நாளைக்கு ஐம்பது காசுகள் தான் உயர்த்தப்பட்டுள்ளதாம்.  அதனால் ஏழைகளுக்கு பாதிப்பே இல்லையாம்...!!!

அந்த மாதிரி ஏழைகள் எங்கிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!

Wednesday, August 11, 2010

இப்பவே இந்த ஓட்டு ஓட்டுறீங்களே.......

என் நண்பர்  ஒருவர் மிக வேகமாக பைக் ஓட்டுவதில் பெயர் போனவர்.  ஒரு நாள் நண்பர்களுக்கிடையில் பைக் ஓட்டும் போட்டி ஒன்று விளையாட்டாக நடைபெற்றது.  நம் ஹை ஸ்பீட் நண்பர் தான் வழக்கம்போல் முன்னால் வருவார் என்று எல்லோரும் எதிர் பார்த்திருந்தோம். 

ஆனால் நம் ஹை ஸ்பீட் நண்பர் முதல் சுற்றில் எதிர் பார்த்ததை விட மெதுவாக வந்தார். இரண்டாவது சுற்றில் இன்னும் லேட் ஆக வந்தார்.  நேரம் ஆக ஆக எங்களுக்கு டென்ஷன் எகிறியது. 

எப்போதும் ஜெயிக்கும் நண்பர் ஒரு முறை தோற்கட்டுமே  என்று ஒரு பிரிவினரும் அவர் தோற்க்க கூடாது  என்று ஒரு பிரிவினரும் எதிர் பார்த்துக்கொண்டிருக்க..  டென்ஷன் எகிற எகிற நம்ம hi  ஸ்பீட் ஒருவழியாக இரண்டாவது இடத்தில் வந்து சேர்ந்தார்.  வாழ்க்கையில் முதன் முறையாக அவரின் பின்னடைவு இது.

பைக்கை கூட நிறுத்தாமல் வேகமாக வந்து கோபமாக அவர் கேட்டார்..
"எவண்டா என் பைக்கில் பிரேக் வயரை அறுத்து விட்டது...???"
காவிரி நதி நீர் பிரச்சினையில்  இரட்டை வேடம்

இவர் கேட்டார்...  அவர் கொடுத்தார்..  பிரச்சினை சுமூகமாக தீர்ந்தது..  

மேற்க்கண்ட தலைப்புடன் கலைஞர்  நியுஸ் தொலைகாட்சியில் மகா பில்ட் அப்புடன் ஒரு செய்தியை வாசித்தார்கள்.  அதாவது தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை தண்ணீர் திறந்துவிடும்படி கேட்டாராம்..  அவரும் சரி என்றாராம்..  உடனே தண்ணீரும் வந்தது....!!!! 

சரி ஏதோ நடக்கிறது..  நல்லது நடந்தால் போதும் என நினைத்து அடுத்த நாள் சன் செய்திகளை பார்த்தால் தலை சுற்றியது??!!!!

காவிரி டெல்டா பகுதிகளில் ஸ்டிரைக், மறியல், கலவரம், போக்குவரத்து பாதிப்பு..  தமிழக லாரிகள் கர்நாடக எல்லையோரம் நிறுத்தம்..  

காரணம்..  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசை கண்டித்து....

கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் மீடியா முன்பு  இல்லா..  இல்லவே இல்லா... என்று செய்து சத்தியம் கொண்டிருந்தார்.

சரி நடந்தது தான் என்ன?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை. அதை தொடர்ந்து கபினி அணையிலிருந்து கட்டாயமாக நீரை வெளியேற்ற வேண்டிய நிலை. எனவே பதினேழாயிரம் கன அடி நீரையும், கே. ஆர். எஸ். அணையிலிருந்து மூவாயிரம் கன அடி நீரையும் (குடிநீருக்காக) திறந்து விட்டிருக்கிறார்கள்.

அதைத்தான் மேற்க்கண்ட பில்ட் அப்களுடன் கலைஞர் டி. வி யில் சுய தம்பட்டம்  அடித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

உண்மையில் ரொம்ப பாவம் தமிழக காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள்.