Friday, August 27, 2010

சுட்டது

என் சினிமா நண்பன் சொன்ன கதை இது. விஜய்காந்த்துக்கு திருமணம் ஆகாத நேரம். அவரது ஆபீசில் எப்போதும் நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பார். ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்கு எல்லோரும் தயார் ஆனார்கள். விஜய்காந்த், இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். நல்ல தலைவாழை இலை போட்டு சாப்பாடு. பரிமாறுகிற இளம்வயது வாலிபன், வரிசையாக எல்லா இலைகளிலும் சிக்கன் துண்டை போட்டுக்கொண்டு வந்தான். ஆர். சுந்தர்ராஜனை கவனிக்காமல் சென்றுவிட்டான். சுந்தர்ராஜனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனைக் கூப்பிட்டார்.

"ஏய் இங்க வா"

"சார்..."

"உம் பேரு என்ன"

"முருகனுங்க"

"எந்தூரு"

"வாடிபட்டிங்க"

"என்னா படிச்சிருக்க"

"மூணாங் கிளாசுங்க"

உடனே அவனை முறைத்துப் பார்த்த ஆர். சுந்தர்ராஜன் கோபத்துடன் இப்படிச் சொன்னாராம்:

"இந்த ஆபீஸ்லயே அதிகமா படிச்சவன்ற திமிர்ல ஆடாத. போடா...போய் சிக்கன் கொண்டு வா"

No comments:

Post a Comment