என் நண்பர் ஒருவர் மிக வேகமாக பைக் ஓட்டுவதில் பெயர் போனவர். ஒரு நாள் நண்பர்களுக்கிடையில் பைக் ஓட்டும் போட்டி ஒன்று விளையாட்டாக நடைபெற்றது. நம் ஹை ஸ்பீட் நண்பர் தான் வழக்கம்போல் முன்னால் வருவார் என்று எல்லோரும் எதிர் பார்த்திருந்தோம்.
ஆனால் நம் ஹை ஸ்பீட் நண்பர் முதல் சுற்றில் எதிர் பார்த்ததை விட மெதுவாக வந்தார். இரண்டாவது சுற்றில் இன்னும் லேட் ஆக வந்தார். நேரம் ஆக ஆக எங்களுக்கு டென்ஷன் எகிறியது.
எப்போதும் ஜெயிக்கும் நண்பர் ஒரு முறை தோற்கட்டுமே என்று ஒரு பிரிவினரும் அவர் தோற்க்க கூடாது என்று ஒரு பிரிவினரும் எதிர் பார்த்துக்கொண்டிருக்க.. டென்ஷன் எகிற எகிற நம்ம hi ஸ்பீட் ஒருவழியாக இரண்டாவது இடத்தில் வந்து சேர்ந்தார். வாழ்க்கையில் முதன் முறையாக அவரின் பின்னடைவு இது.
பைக்கை கூட நிறுத்தாமல் வேகமாக வந்து கோபமாக அவர் கேட்டார்..
"எவண்டா என் பைக்கில் பிரேக் வயரை அறுத்து விட்டது...???"
No comments:
Post a Comment